'கெட்ட கொழுப்பு இல்லா உலகம்' என்ற உன்னத நோக்கத்தோடும், காது கேளா மாணவர்களின் நலனில் அக்கரை கொண்டு அவர்களுக்கும் தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தவேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு 2018 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது தான் நேச்ரோ ஃபுட்ஸ் நிறுவனம். இது அரசாங்கத்தின் அனைத்து வித் முறைகளையும் முழுமையாக அமல்படுத்தும் நிறுவனம். இது திருநல்வேலி மாவட்ட நீச்சல் கழகத்தில் ஈடுபாடுகொண்டு அதன் மூலம் இணைக்கப்பட்ட ஆறு நண்பர்களால் நடத்தப்பட்டு வருகிறது. எங்கள் நிறுவனம் முலம் பயன் பெற்றோர் அநேகர், கடந்த பல ஆண்டுகளாக எங்கள் நிறுவனத்திற்குத் தரும் நன்மதிப்பையும், பேராதரவையும் நன்றியுடன் பெருமிதம் கொள்கிறோம். எங்களது மரச்செக்கு எண்ணெய் தமிழகம் முழுவதும் 24 மணிமுதல் 48 மணி நேரத்திற்குள் டோர் உலிவரி செய்யப்படுகிறது.
முதல் தரமான தாவர எண்ணைய் வித்துக்கள் பல விதமான தர பரிசோதனைகளுக்குப் பின் விதீமுறைகளுக்கு உட்பட்டு வாங்கப்படுகிறது. நன்றாக சூரிய ஒளியில் உலரவைக்கப்பட்ட பின்பு. வாகை மரத்தீனால் செய்யப்பட்ட உரல் மற்றும் உலக்கை) செக்கில் பழைய காலத்தில் மாடு கொண்டு சுற்றும் வேகத்தில் மின்சார மோட்டார் கொண்டு குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டு அறை வெப்பநிலையில் எண்ணெய் பிரித்தெடுக்கப்படுகிறது. அக்கால முறைப்படி பாத்திரங்களில் துணியால் முடப்பட்டு காலை 8.3௦ முதல் 12.3௦ வரை வெயிலில் நான்கு நாட்கள் வைக்கப்படுகிறது.பின்பு இருட்டு அறையில் நான்கு நாட்கள் வைக்கப்பட்டுகிறது. அதன் பின்பு தெளிந்த சுத்தமான எண்ணைய் பிரிக்கப்பட்டு முதல் தர உணவுப் பெருட்கள் உபயோகத்தீற்காக பிரேத்யேகமாக தயாரிக்கப்பட்ட பாட்டில்களில் அடைக்கப்பட்டு சீலிடப்பட்டு அவற்றிற்கான அரசின் விதிமுறைகளைப் பின்பற்றி அச்சிடப்பட்ட லேபில்கள் ஒட்டி விற்பனை செய்யப்படுகிறது. எங்களது வாடிக்கையாளர்களுக்கு ஏழு நாட்களுக்குள் நேரடியாக சென்றடைகிறது. மேற்கண்ட செயல்பாடுகள் அனைத்தும் உணவு பாதுகாப்பு பயிற்சி மற்றும் சான்றிதழ் பெற்ற நபரால் மேற்பார்வை செய்யப்பட்டு தரம் உறுதிசெய்யப்படுகிறது. அக்காலத்து முறைப்படி தயாரிப்பதால் எண்ணெய்யின் ஆயுட்காலம் குறைவு (9௦ நாட்கள்) அதை உபயோகிக்கும் வாடிக்கையாகளர்களின் ஆயுட் காலம் அதிகம். தாவர எண்ணைய் வித்துக்களில் இருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெய் ம்ட்டுமே நாம் உண்பதத்குத் தகுதீியானது மட்டுமல்ல எளிதில் ஜீரணமாக கூடியது. நிலக்கடலையில் இருந்து 38 சதவீதம் முதல் 42 சதவீதம் மட்டூமே கடலை எண்ணைய் பிரித்தெடுக்க முடியும். எள்ளில் இருந்து 33 சதவீதம் முதல் 40 சதவீதம் மட்டுமே நல்லெண்ணெய் பிரித்தெடுக்க முடியும். அதன் காரல் சுவையை குறைப்பதற்காக 1௦ சதவீதம் கரும்பிலிருந்து எடுக்கப்படும் வெல்லம் சேர்த்து தயாரிக்கப்படுகிறது. சூரிய ஒளியில் சல்பர் இல்லாமல் உலரவைக்கப்பட்ட கொப்பரை தேங்காவில் இருந்து 5௦ சதவீதம் முதல் 53 சதவீதம் வரை தேங்காய் எண்8ண்ய் பிரித்தெடுக்க முடியும். முலப்பொருட்களான எண்ணைய் வித்துக்கள் வெவ்வேறு விதமான நிலங்களில் விளைவதால் அதன் சுவை, மணம் மற்றும் நிறம் அதற்கேற்ப மாறுபடும். நாங்கள் பிரித்தெடுக்கும் எண்ணெய் வகைகளின் சுவை, நீறம் மற்றும் மணம் மாறுபட்டே காணப்படும். எப்பொழுதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. விவசாயிகளுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் தனிப்பட்ட முறையில் அவர்கள் கொண்டுவரும் மூலப்பொருட்கள் மூலம் எண்ணய் பிரித்தெடுத்தும் தருகிறோம்.